சஜித்துக்கு கல் வீசிய இருவருக்கு விளக்கமறியல் - sonakar.com

Post Top Ad

Wednesday, 30 September 2020

சஜித்துக்கு கல் வீசிய இருவருக்கு விளக்கமறியல்

 



நேற்றிரவு இரத்மலானையில் சஜித் பிரேமதாச கலந்து கொண்டிருந்த கூட்டத்தை நோக்கி அவர் உரையாற்றிக் கொண்டிருக்கையில் கல் வீசியதன் பின்னணியில் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.


கல்கிஸ்ஸ நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டிருந்த இருவரையும் ஒக்டோபர் 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.


கல் வீசும் குழப்பக்காரர்களுக்கு ரணசிங்க பிரேமதாசவின் மகனான தான் பயப்படப் போவதில்லையென சஜித் தெரிவித்திருந்த அதேவேளை வீசப்பட்ட கற்களை சமூக நலன்புரி நிலையம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல்லாகப் பயன்படுத்தப் போவதாக இரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment