தாக்குதல் பற்றி ஆயருக்கும் முன் கூட்டியே தெரிந்திருக்கும்: ஹரின் - sonakar.com

Post Top Ad

Thursday, 17 September 2020

demo-image

தாக்குதல் பற்றி ஆயருக்கும் முன் கூட்டியே தெரிந்திருக்கும்: ஹரின்

jsJqKeH


ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அனைத்து தரப்பும் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் கத்தோலிக்க தேவாலயத்துக்கும் இவ்விடயம் பற்றி முன் கூட்டியே தெரிந்திருக்க வாய்ப்பிருப்பதாக ஜனாதிபதி விசாரணைக்குழுவிடம் தெரிவித்துள்ளார் ஹரின் பெர்னான்டோ.


வழக்கமாக ஈஸ்டர் தினத்தன்று கொழும்பு ஆயரின் தலைமையிலேயே வழிபாடுகள் நடைபெறுகின்ற போதிலும் 2019ல் மாத்திரம் அது நடைபெறவில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளது, குறித்த வருடம் ஒரு நாள் முன்னதாக ஈஸ்டர் விழிப்பு நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளமையால் தாக்குதல் எச்சரிக்கை தேவாலயத்துக்கும் வழங்கப்பட்டிருக்கலாம் என அவர் விளக்கமளித்துள்ளார்.


இப்பின்னணியில் கொழும்பு ஆயர் உட்பட அனைத்து தரப்பும் விசாரிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment