பணம் வாங்கிவிட்டு ஆஜராகாத சட்டத்தரணிக்கு 7 வருட தடை! - sonakar.com

Post Top Ad

Saturday, 26 September 2020

பணம் வாங்கிவிட்டு ஆஜராகாத சட்டத்தரணிக்கு 7 வருட தடை!

 


மூன்று லட்ச ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்டு வழக்குக்கு ஆஜராக மறுத்த சட்டத்தரணியொருவருக்கு 7 வருட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.


கருணாரத்ன பண்டா என அறியப்படும் வாடிக்கையாளரிடமே இவ்வாறு பணத்தைப் பெற்று விட்டு நீதிமன்றில் ஆஜராக மறுத்துள்ளார் அம்பத்தன்னயைச் சேர்ந்த விஜேவர்தன. 


இந்நிலையில் இது தொடர்பில் விசாரித்த மூன்று நீதிபதிகள் குழு இவ்வாறு தீர்ப்பளித்துள்ளதுடன் பெற்ற பணத்தை திரும்ப வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment