கொரோனா சூழ்நிலையில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை கட்டாயம் எரியூட்ட வேண்டும் என அரசாங்கம் வெளியிட்டிருந்த திருத்தப்பட்ட சுற்றுநிருபத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்குகளை பரிசீலிப்பதற்கு நவம்பவர் 26ம் திகதி புதிய தேதியை வழங்கியுள்ளது நீதிமன்றம்.
மே மாதம் அவசரமாக இதற்கான தேதியொன்றைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் அக்காலப் பகுதியில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. எனினும், இன்றளவில் அதற்குப் புதிய தேதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், முன்னர் குறிப்பிடப்பட்டிருந்த நபர்கள் சிலர் அப்பதவிகளில் இல்லாத நிலையில் மனுக்கள் திருத்தம் செய்யப்பட்டு புதியவர்களின் பெயர்கள் இணைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment