20ம் திருத்தச் சட்டம்: நாலக தேரர் அதிருப்தி! - sonakar.com

Post Top Ad

Wednesday, 9 September 2020

20ம் திருத்தச் சட்டம்: நாலக தேரர் அதிருப்தி!


அரசாங்கம் முன் வைத்துள்ள 20ம் திருத்தச் சட்ட வரைபுடன் முழுமையாக உடன்பட முடியாது என தெரிவிக்கிறார் பெங்கமுவே நாலக தேரர்.


ஜனாதிபதியொருவர் அரசியலமைப்பின் பிரகாரம் செயற்படுவாராக இருந்தால் அவரை நீதிமன்றுக்குக் கொண்டு செல்ல வேண்டிய அவசியமில்லை. ஆனாலும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டால் அவருக்கு எதிராக நீதிமன்றம் செல்வதற்கான தேவையுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


உத்தேச 20ம் திருத்தச் சட்ட முன்மொழிவுகளில் அரச கணக்காய்வாளரின் அதிகாரங்களும் வரையறுக்கப்பட்டிருப்பதாகவும் இது போன்ற விடயங்களை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment