20 கோடி கப்பம் செலுத்துகிறோம்: பஸ் உரிமையாளர்கள் - sonakar.com

Post Top Ad

Sunday, 6 September 2020

20 கோடி கப்பம் செலுத்துகிறோம்: பஸ் உரிமையாளர்கள்


நாட்டில் பாதாள உலக மற்றும் போதைப் பொருள் பிரச்சினை போன்றே பஸ் உரிமையாளர்களிடம் கப்பம் பெறும் முக்கியமான பிரச்சினையொன்றும் இருப்பதாக தெரிவிக்கிறது தனியார்  பஸ் உரிமையாளர்கள் சங்கம்.


நாடளாவிய ரீதியில் மாதாந்தம் 20 கோடி ரூபா இவ்வாறு பஸ் உரிமையாளர்கள் கப்பம் செலுத்துவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


பொதுவாக பஸ் உரிமையாளர்கள் தமது இலாபத்தில் 25 வீதத்தை இவ்வாறு கப்பம் செலுத்துவதனால் அது குறித்து அரசு கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment