இரட்டைக் குடியுரிமையுள்ளவர்கள் இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகிப்பதற்கு 19ம் திருத்தச் சட்டம் ஊடாகக் கொண்டு வரப்பட்டிருந்த தடையை நீக்குவதற்கான சரத்துக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
20ம் திருத்தச் சட்டம் ஊடாக 19 ஊடாக கொண்டுவரப்பட்டிருந்த பல்வேறு திருத்தங்களை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களை நீக்குவதற்கு நடைமுறை அரசு முயற்சி செய்து வருகிறது. அதற்கமைவாக 20ம் திருத்தச் சட்டத்தின் வரைபு வெளியிடப்பட்டுள்ள நிலையில் இரட்டைக் குடியுரிமையுள்ளவர்களுக்கு நாடாளுமன்றில் அங்கம் வகிக்க அனுமதிப்பதை சுதந்திரக் கட்சி எதிர்ப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சட்டம் திருத்தப்பட்டாலேயே பசில் ராஜபக்ச மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment