20 ம் திருத்தச் சட்ட வரைபு தொடர்பில் ஆளுங்கட்சிக்குள் ஏகமான தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லையெனவும் கருத்து வேறுபாடு நிலவுவதாகவும் தெரிவிக்கிறார் பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி.
குறிப்பாக இரட்டைக் குடியுரிமை கொண்டுள்ளவர்களை நாடாளுமன்றில் அனுமதிப்பது தொடர்பில் பெருமளவு கருத்து வேறுபாடு நிலவுவதாகவும் அதில் நாட்டு நலனுக்கு ஆபத்துள்ளதாகவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
பசில் ராஜபக்சவை நாடாளுமன்றுக்குள் அனுமதித்து அதனூடாக ராஜபக்ச குடும்பத்தைப் பலப்படுத்துவதற்காகவே குறித்த மாற்றம் அவசியப்படுவதாக எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment