19ம் திருத்தச் சட்டத்தை அமுலில் வைத்துக் கொண்டு நாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியாது எனவும் கட்டாயம் நீக்கியே ஆக வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச.
20ம் திருத்தச் சட்ட வரைபு விமர்சனங்களுக்குள்ளாகியிருந்த நிலையில் அதனை ஆராய குழு அமைத்திருந்த போதிலும், திருத்தங்கள் எதுவும் முன் வைக்கப்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சட்டத்திருத்தம் ஆளுந்தரப்பின் முக்கியஸ்தர்கள் எவருக்கும் தெரியாமலேயே தயாரிக்கப்பட்டிருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டு வருகின்ற நிலையில், தற்போது ஒன்றில் தயாரிக்கப்பட்ட உத்தேச 20ம் திருத்தச் சட்ட வரைபை மாற்றமின்றி நிறைவேற்றுவது அல்லது புதிய அரசியலமைப்பை உருவாக்குவது என்பதில் தாம் திடமாக இருப்பதாக இவ்வார அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்து ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment