ஓட்டமாவடியில் டெங்கினால் 189 பேர் பாதிப்பு - sonakar.com

Post Top Ad

Wednesday, 30 September 2020

ஓட்டமாவடியில் டெங்கினால் 189 பேர் பாதிப்பு

 


ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கடந்த ஒரு வாரத்தில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எட்டாக காணப்படுவதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.


ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரவில் கடந்த ஜனவரி மாதம் 01ம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 30ம் திகதி வரை 189 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் செப்டம்பர் மாதம் மாத்திரம் 14 நான்கு பேரும் அதில் கடந்த வாரம் மாத்திரம் எட்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதில் பாடசாலை மாணவர்கள் ஆறு பேர் என்பது குறிப்பிடத்தக்கது.


ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் அதிகரித்து வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக்கின் வழிகாட்டலில் பல்வேறு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.


அதன் அடிப்படையில் இன்று புதன்கிழமை ஓட்டமாவடி இரண்டாம் வட்டாரத்தில் வடிகான்கள் துப்பரவு செய்யப்பட்டதுடன் வீடுகள் மற்றும் பாடசாலை என்பன பரிசோதிக்கப்பட்டதுடன் பொது மக்களுக்கு டெங்கு நோயின் தாக்கம் தொடர்பாகவும் தெளிவூட்டப்பட்டது.


இந் நிகழ்வுக்கு ஓட்டாமாவடி பிரதேச செயலகம், ஓட்டமாவடிபிரதேச சபை, பிரதேச விளையாட்டுக்கழகங்கள் என்பன பங்களிப்பினை வழங்கியிருந்தனர்.


ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக்கின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எல்.நௌபல், ஓட்டமாவடி பிரதேச செயலக உதவி திட்ட பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், பிரதேச செயலக கணக்காளர் அஹமட் சஜ்ஜாத், மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஏ.எல்.நௌபர், பொது சுகாதார பரிசோதகர்கள் பிரதேச செயலக பிரதேச சபை ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


-எஸ்.எம்.எம்.முர்ஷித்

No comments:

Post a Comment