18ஐ மீளக் கொண்டு வரும் மாற்று வழியே 20: சுமந்திரன் - sonakar.com

Post Top Ad

Monday, 7 September 2020

18ஐ மீளக் கொண்டு வரும் மாற்று வழியே 20: சுமந்திரன்

மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் உருவாக்கப்பட்ட 18ம் திருத்தச் சட்டத்தினை மீளக் கொண்டு வருவதற்கான மாற்று வழியே 20ம் திருத்தச் சட்டம் என தெரிவிக்கிறார் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ சுமந்திரன்.


அனைத்து அதிகாரங்களையும் ஓரிடத்தில் குவித்து ஜனாதிபதியை சர்வாதிகாரியாக்குவது ஜனநாயக சூழலுக்கு உகந்ததல்ல எனவும் அதனை கடுமையாக எதிர்த்து, இதற்கெதிராகப் போராடப் போவதாகவும் அவர் தெரிவிக்கிறார்.


19ம் திருத்தச் சட்டம் ஊடாக ஜனாதிபதியின் அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டதுடன் சுயாதீன ஆணைக்குழுக்களும் உருவாக்கப்பட்டிருந்தன. எனினும், தனி நபரிடம் அதிகாரம் இருப்பதே இலங்கையின் அரசியலுக்கு தேவையென ஆளுங்கட்சியினர் தெரிவித்து வருகின்றமையும் 2014 வரை மஹிந்த ஆட்சியில் பங்கெடுத்திருந்த முஸ்லிம் கட்சிகளும் இதையே அப்போது கூறி நியாயப்படுத்தியிருந்தமையும் பிற்காலத்தில் தவறிழைத்து விட்டதாக விளக்கமளித்திருந்தமையும் நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment