ஞானசார உடனடியாக MP ஆக முடியாது: ரதன தேரர் - sonakar.com

Post Top Ad

Thursday, 13 August 2020

ஞானசார உடனடியாக MP ஆக முடியாது: ரதன தேரர்


ஞானசார உடனடியாக நாடாளுமன்ற உறுப்பினராவதில் சட்டச் சிக்கல்கள் இருப்பதாகவும் அது சாத்தியமற்ற விடயம் எனவும் தெரிவிக்கிறார் அத்துராலியே ரதன தேரர்.


அபே ஜன பல கட்சியுடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில் தேசியப்பட்டியல் நியமனத்தை முன்மொழியும் அதிகாரம் தமக்கே உள்ளதாக தெரிவிக்கின்ற அவர், ஞானசாரவுக்கு இருக்கும் சட்டச் சிக்கல் காரணமாக, முதலில் வேறு ஒருவரை நியமித்து அவர் இராஜினாமா செய்த பின்னரே ஞானசாரவை நியமிக்க முடியும் எனவும் விளக்கமளித்துள்ளார்.


எனினும், எல்லோருக்கும் முந்தி தன்னைத் தானே நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்த விமலதிஸ்ஸ தேரர் அதனை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லையெனவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment