பெரமுன - சு.க உறவில் மேலும் விரிசல்: ரஞ்சித் - sonakar.com

Post Top Ad

Thursday, 13 August 2020

பெரமுன - சு.க உறவில் மேலும் விரிசல்: ரஞ்சித்

 

அமைச்சரவை நியமனத்தோடு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் பொதுஜன பெரமுனவுக்குமிடையிலான உறவு மேலும் விரிசலடைந்துள்ளதாக தெரிவிக்கிறார் ரஞ்சித் மத்தும பண்டார.


14 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஒரு அமைச்சுப் பதவி மாத்திரமே வழங்கப்பட்டுள்ள அதேவேளை முக்கிய நபர்கள் இராஜாங்க அமைச்சர்களாக்கப்பட்டு, கட்சித் தலைவர் மைத்ரிபால சிறிசேன பொலன்நறுவயில் அதி கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற போதிலும் கை விடப்பட்டுள்ளார்.


இந்நிலையில், இரு தரப்பு உறவில் பாரிய விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்கால தேர்தல்களில் அது பிரதிபலிக்கும் எனவும் சமகி ஜன பல வேகய செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார.

No comments:

Post a Comment