தெ. ஆபிரிக்க பள்ளிவாசல் ஒன்றில் 'பாங்கு' சத்தத்தைக் குறைக்க தீர்ப்பு - sonakar.com

Post Top Ad

Saturday, 29 August 2020

தெ. ஆபிரிக்க பள்ளிவாசல் ஒன்றில் 'பாங்கு' சத்தத்தைக் குறைக்க தீர்ப்பு

தென்னாபிரிக்கா, ஐசிபின்கோ பகுதியில் இயங்கி வரும் பள்ளிவாசல் ஒன்றின் பாங்கோசை தனது அடிப்படை உரிமைகளை பாதிப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தொடுத்த வழக்கின் பின்னணியில் பாங்கு சத்தம் அவரது வீட்டை அடையாதவாறு ஒலிபரப்ப  ஆவன செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.


மத்ரஸா தலிமுடீன் இஸ்லாமிய கல்வி நிலையத்துடனான பள்ளிவாசலிலிருந்து வரும் பாங்கோசைக்கு எதிராகவே அப்பகுதியில் வாழும் சந்ரா எலூரி எனும் இந்து மதத்தைப் பின்பற்றும் நபர் ஒருவரால் இவ்வழக்கு தொடரப்பட்டிருந்தது.


இதனை விசாரித்த டர்பன் உயர் நீதிமன்றம், அவரது வாதத்தை ஏற்றுக் கொண்டதோடு சத்தத்தை குறைத்தாக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. எனினும், பள்ளிவாசலுக்கு மிக அண்மையில் குறித்த நபர் வாழ்வதால் ஒலிபெருக்கியில் பாங்கு சொல்வதை நிறுத்தி வைப்பதாக கூறுகின்ற பள்ளி நிர்வாகம், மேன்முறையீடு செய்யவுள்ளதாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment