அங்கஜன் - அதாவுல்லாவுக்கு அமைச்சுப் பதவிகள் தர வேண்டும்: விமல் - sonakar.com

Post Top Ad

Monday, 24 August 2020

அங்கஜன் - அதாவுல்லாவுக்கு அமைச்சுப் பதவிகள் தர வேண்டும்: விமல்


வடக்கிலும் கிழக்கிலும் பொதுஜன பெரமுன ஆட்சியை ஆதரித்துத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற அங்கஜன் ராமநாதன் மற்றும் அதாவுல்லாவுக்கு அமைச்சுப் பதவிகள் தரப்பட வேண்டும் என குரல் கொடுத்துள்ளார் விமல் வீரவன்ச.


விக்ணேஸ்வரன் - சம்பந்தன் போன்றோரின் இனவாத அரசியலுக்கு எதிராக அங்கஜன் வடக்கில் போராடி வென்றிருப்பதாகவும் அவருக்கு கட்டாயம் அமைச்சுப் பதவியொன்று தரப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கின்ற விமல் நாட்டில் ஒரே சட்டமே இருக்க வேண்டும் எனவும் கொள்கையளவில் தமது பங்காளிகள் ஒன்றிணைந்தே இருப்பதாகவும் விளக்கமளித்துள்ளார்.


அமைச்சரவை நியமனத்தின் போது அதாவுல்லாவுக்கும் பதவி எதிர்பார்க்கப்பட்டிருந்த போதிலும் அது வழங்கப்படாத நிலையில், 19ஐ நீக்கியதும் இடம்பெறும் என எதிர்பார்க்கும் அமைச்சரவை விஸ்தரிப்பின் போது அமைச்சுப் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment