தனக்கு வழங்கப்பட்டிருக்கும் அமைச்சின் கடமைகளினால் சுமை அதிகம் எனக் காரணங் காட்டி அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பொறுப்பை வேறு யாருக்காவது வழங்கும்படி பிரதமரிடம் தெரிவித்துள்ளார் பந்துல குணவர்தன.
வர்த்தகத்துறை அமைச்சின் சுமைகள் அதிகம் என தெரிவித்துள்ள பந்துல இப்பதவியை நிராகரித்துள்ளதுடன் தமக்கிருக்கும் மேலதிக சுமைகளைக் குறைக்கும்படியும் மஹிந்த ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாளை மறுதினம் புதிய அமைச்சரவையின் கன்னியமர்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment