அனைத்து இனத்தவர்களும் சமவுரிமையோடு வாழ முடியும்: பிரதமர் - sonakar.com

Post Top Ad

Sunday, 23 August 2020

அனைத்து இனத்தவர்களும் சமவுரிமையோடு வாழ முடியும்: பிரதமர்

தனது பாரிய வெற்றிக்காக உழைத்த குருநாகல் மாவட்ட பௌத்த துறவிகளுக்கு விசேட நிகழ்வொன்றை நடாத்தி நன்றி தெரிவித்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.


இதன் போது, இலங்கையில் பௌத்த மதத்துக்கு வழங்கப்பட வேண்டிய முன்னுரிமையை வழங்கி அதனை பாதுகாப்பதோடு ஏனைய இனங்களையும் கௌரவமாக வாழ வழி செய்யப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.


சிங்கள இனத்தின் ஒரே நாடான இலங்கையைக் காப்பாற்ற, இதுவே இறுதி சந்தர்ப்பம் என்ற பிரச்சாரத்தின் உதவியால் பெரமுன ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள அதேவேளை சிறுபான்மை கட்சிகளின் ஆதரவோடு மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment