ஞானசார, தனக்குக் கிடைக்க வேண்டியதாக தெரிவித்துக் கொண்டிருக்கும் அபே ஜன பல கட்சி தேசியப் பட்டியலை தனதாக்கிக் கொண்டு தலைமறைவாக இருக்கும் அக்கட்சியின் செயலாளர் விமலதிஸ்ஸ தேரை கைது செய்ய பொலிசார் மும்முர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்னும் இரு தினங்களில் நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில் அதற்குள் விமலதிஸ்ஸவை பிடித்தாக வேண்டும் என பொது பல சேனாவினரும் தீவிர தேடல், கடத்தல், கட்டி வைத்து அடித்தல் போன்ற பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், அஸ்கிரியவில் 700 வருட பழமையான புராதனச் சொத்தை சேதப்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு விமலதிஸ்ஸ தேரரை பொலிசார் தேடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment