குழப்பவாதி 'கருணாவை' நிராகரித்த தமிழ் மக்கள்! - sonakar.com

Post Top Ad

Friday, 7 August 2020

குழப்பவாதி 'கருணாவை' நிராகரித்த தமிழ் மக்கள்!

https://www.photojoiner.net/image/SLPZj8Qh

தென் பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டு செயற்படுத்தப்பட்டு வரும் இன விரோத செயற்பாடுகளை கிழக்கில் விதைப்பதன் ஊடாக அங்கு இனப் பிரிவினைகளை வளர்ப்பதற்கும், அதனூடாக அரசியல் இலாபம் காண்பதற்கும் கடந்த சில வருடங்களாக படாத பாடு பட்ட கருணா அம்மான் எனும் விநாயகமூர்த்தி முரளிதரனை தமிழ் மக்கள் நிராகரித்துள்ளனர்.


இதேவேளை, கிழக்கு மாகாண தமிழ் மக்களின் அபிலாசைகள் மற்றும் அரசியல் எதிர்பார்ப்புகளை மையமாக வைத்து அரசியல் செய்து வரும் முன்னாள் கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையான் என அறியப்படும் சிவநேசத்துறை சந்திரகாந்தன் சிறையிலிருந்தவாறே மாவட்டத்தின் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று (54.198) வெற்றி பெற்றுள்ளார்.


மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி இரு ஆசனங்களை வென்றுள்ளதுடன் வியாழேந்திரனும் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment