கொச்சிக்கடையில் 'கோடீஸ்வர' யாசகன் கைது! - sonakar.com

Post Top Ad

Tuesday, 25 August 2020

கொச்சிக்கடையில் 'கோடீஸ்வர' யாசகன் கைது!

கொழும்பு, கொச்சிக்கடை தேவாலயம் அருகே யாசகத்தில் ஈடுபட்டு வந்த 'கோடீஸ்வர' நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.


குறித்த நபருக்கு சொந்தமான மஹரகம வீடொன்றின் மேல் மாடிப் பகுதியிலிருந்து மாத்திரம் மாதாந்தம் 30,000 ரூபா வாடகை வருமானம் வருவதாகவும் தினசரி தேவாலயம் அருகே 5000 ரூபா குறித்த நபர் சம்பாதிப்பதாகவும் பொலிசார் கண்டறிந்துள்ளனர்.


64 வயதான குறித்த நபர், யாசகம் செய்யும் பகுதியில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் ஒன்றின் பின்னணியில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment