சிங்கள முறைப்படி அமைச்சரவை நியமனம்: ஆனந்த தேரர் திருப்தி! - sonakar.com

Post Top Ad

Friday, 14 August 2020

சிங்கள முறைப்படி அமைச்சரவை நியமனம்: ஆனந்த தேரர் திருப்தி!

இம்முறை சிங்கள முறைப்படி அமைச்சரவை நியமனம் இடம்பெற்றமை சிலருக்கு பிடிக்கவில்லையென்றாலும் தனக்குத் திருப்தியளிப்பதாக தெரிவிக்கிறார் அபயராம விகாரையின் தலைமைத் துறவியும் மஹிந்த ராஜபக்சவின் தீவிர ஆதரவாளருமான முருத்தெட்டுவே ஆனந்த தேரர்.


மஹிந்த அமரவீர தனது கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


இம்முறை அமைச்சரவை நியமனம் கண்டியில், கண்டி ராஜதானியில் இடம்பெறும் வழமைக்கேற்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment