ஞானசார - ரதனே சமாதானம்: இடையால் புதுச் சிக்கல்! - sonakar.com

Post Top Ad

Sunday 9 August 2020

ஞானசார - ரதனே சமாதானம்: இடையால் புதுச் சிக்கல்!

 https://www.photojoiner.net/image/aSZ293sz


அபே ஜன பல கட்சிக்குக் கிடைத்துள்ள தேசியப் பட்டியல் ஆசன இழுபறி வேறு வகையில் தொடர்கிறது.


ஞானசார - ரதன தேரர்களுக்கிடையில் நிலவிய முரண்பாடு, கட்சி மட்டத்தில் தீர்க்கப்பட்டு பெரும்பாலானோரின் விருப்புக்கிணங்க ஞானசாரவை அப்பதவிக்கு முன்மொழியும் வகையில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடிதத்தை ஒப்படைக்கத் தயாராகும் நிலையில் கட்சியின் செயலாளர், அந்தப் பதவிக்குத் தானே தெரிவு செய்யப்பட்டிருப்பதாக ஏலவே கடிதத்தை ஒப்படைத்து விட்டு தற்சமயம் தொடர்பிலில்லாமல் இருப்பதாக தெரியவந்துள்ளது.


அஸ்கிரியே விமலவன்ச தேரரே இவ்வாறு தன்னைத் தானே நியமித்துள்ள அதேவேளை ஞானசாரவின் தெரிவு கடிதத்தை ஒப்படைப்பதில் சட்டச் சிக்கல் ஒன்றும் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வேட்பு மனு நிராகரிக்கப்பட்டவர் என்ற அடிப்படையில் அவரை தேசியப் பட்டியல் ஊடாக நியமிப்பதில் சிக்கல் இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

No comments:

Post a Comment