செயலாளரைத் தேடி ஞானசார குழு குழப்பம்! - sonakar.com

Post Top Ad

Sunday, 9 August 2020

செயலாளரைத் தேடி ஞானசார குழு குழப்பம்!

ஞானசார தேரரும் அத்துராலியே ரதன தேரரும் தமக்குக் கிடைத்த தேசியப் பட்டியலைப் பங்கிடுவதில் சண்டையிட்டுக் கொண்டிருந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் தனது பெயரை தேசியப் பட்டியலுக்கு நியமனம் செய்து கடிதம் ஒப்படைத்து விட்டு தலைமறைவாகியுள்ள தேரரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளது அபே ஜன பல கட்சி.


கட்சி மட்டத்தில் ஞானசாரவை நாடாளுமன்றுக்கு அனுப்ப உடன்பாடு காணப்பட்டுள்ள நிலையில் குறித்த செயலாளரின் கடிதத்தால் ஏற்பட்டுள்ள சிக்கலைத் தீர்க்கவே இவ்வாறு அவரை நீக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


எனினும், தேர்தல் ஆணைக்குழு இது தொடர்பில் என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்தே ஞானசாரவின் நாடாளுமன்ற பிரவேசம் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment