19ம் திருத்தச் சட்டத்தை நீக்குவதோடு மாத்திரமன்றி புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்கான செயற்திட்டங்களை அரசு முன்னெடுக்கும் என தெரிவிக்கப்படும் நிலையில் இன்று கூஎய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு, இவ்விவகாரத்தைக் கையாள்வதற்கென கட்சி மட்டத்திலான பிரத்யேக குழுவை உருவாக்கியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று இடம்பெற்ற சந்திப்பில், அரசியலமைப்பு மாற்றம், சட்டத்திருத்தங்கள் போன்ற விடயங்களை ஆராய்ந்து கட்சி மட்டத்தில் கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் குழுவாக இது இயங்கும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடனேயே பெரமுனவினர் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment