ஊழல்களை மறைக்கப் போராடியவர் நீதியமைச்சர்: ஹரின் விசனம் - sonakar.com

Post Top Ad

Thursday, 13 August 2020

ஊழல்களை மறைக்கப் போராடியவர் நீதியமைச்சர்: ஹரின் விசனம்

கடந்த அரசில் ஊழல்வாதிகளின் குற்றங்களை மறைக்கப் போரடிய ஒருவரிடம் நீதியமைச்சு ஒப்படைக்கப்பட்டிருப்பது கவலையளிக்கிறது என்கிறார் ஹரின் பெர்னான்டோ.


அலி சப்ரி ஒரு முஸ்லிம் என்பதற்காக பெரமுனவினரே அவருக்கு எதிராக பல்வேறு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், எங்களுக்கு அவர் முஸ்லிமாக இருப்பது பிரச்சினையில்லை. நீதித்துறையை திசை திருப்பி ஊழல்வாதிகளை காப்பாற்ற முனைந்த ஒருவரிடமே அந்த நீதித்துறை கையளிக்கப்பட்டிருப்பதுதான் கவலையென அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.


இதேவேளை, பதவியேற்பின் போது தனது அண்ணன் மஹிந்தவை ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச மரியாதை நிமித்தம் வணங்கியது போல அடுத்த ஐந்து வருடங்களுக்கு மஹிந்த சொல்வதையே கேட்டு நடக்கவும் வேண்டும் எனவும் ஹரின் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment