மிளகாய்த் தூள் வீசுவது குற்றமா? பிரசன்ன ரணவீர கேள்வி! - sonakar.com

Post Top Ad

Saturday, 1 August 2020

மிளகாய்த் தூள் வீசுவது குற்றமா? பிரசன்ன ரணவீர கேள்வி!


தான் நாடாளுமன்றில் மிளகாய்த் தூள் விசிய விவகாரம் தொடர்ந்து பேசப்பட்டு வருவது கவலையளிப்பதாகவும் அதில் என்ன தவறு இருக்கிறதெனவும் கேட்கிறார் பெரமுன வேட்பாளர் பிரசன்ன ரணவீர.

2018 நவம்பரில் நாடாளுமன்றில் இடம்பெற்ற அமளியின் போது பிரசன்ன இவ்வாறு நடந்து கொண்டிருந்த நிலையில் மிளகாய்த் தூள் வீசுவது பாவமில்லையென அவர் விளக்கமளித்துள்ளார்.

ஜே.வி.பியினர் நாடாளுமன்றுக்கு குண்டு வீசியதாகவும், ரஞ்சன் - பாலித்த ஆகியோர் கத்தி கொண்டு சென்றிருந்ததாகவும் அதனால் தான் செய்ததில் தவறேதும் இல்லையெனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment