20ம் திருத்தம் ஊடாக 'அதிகாரம்' கோரும் பிக்குகள் சபை - sonakar.com

Post Top Ad

Monday, 31 August 2020

20ம் திருத்தம் ஊடாக 'அதிகாரம்' கோரும் பிக்குகள் சபை

19ம் திருத்தத்தை நீக்கி 20ம் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வரும் போது, அதனூடாக நாட்டின் முக்கிய முடிவுகளை மேற்கொள்ளும் தருணத்தில் தேவையான அதிகாரத்துடன் அதில் பங்கேற்கக் கூடிய பிக்குகள் சபையொன்றை உருவாக்க வேண்டும் என அஸ்கிரி சங்க சபா வேண்டுகோள் விடுத்துள்ளது.


யுத்த நிறைவின் பின் இலங்கையில் மீண்டும் தமது ஆதிக்கத்தை நிறுவுவதற்கு சங்க சபாக்கள் நீண்ட காலமாக முயன்று வருகின்றன. அத்துடன், இலங்கை எனும் பௌத்த நாட்டைக் காப்பாற்ற இதுவே கடைசி சந்தர்ப்பம், நாட்டுக்குத் தேவையான சிங்கள தலைவர் கோட்டாபே ராஜபக்சவே என விகாரைகள் வலையமைப்புகள் ஊடாக தீவிர பிரச்சாரங்கள் செய்து பெரமுன மீண்டும் வெற்றி பெறுவதற்கு பௌத்த துறவிகள் பெருமளவில் உதவியிருந்தனது. 


இப்பின்னணியில், மெதகம தம்மானந்த ஹிமி நேற்றைய தினம் அரச பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற விசேட சந்திப்பில் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளதுடன், இது குறித்து மக்கள் அபிப்பிராயத்தை அறியும் நோக்கிலான கலந்துரையாடல்களை மேற்கொள்ளப்போவதாக அமைச்சர் ஜி.எல். பீரிஸ் வாக்குறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment