19ம் திருத்தச் சட்டத்தை நீக்குவதை இலக்காகக் கொண்டு அரசு மும்முர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் ஜனநாயகம் பேணப்பட வேண்டும் எனவும் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடியே அவ்வாறான ஒரு முடிவுக்குச் செல்ல வேண்டும் என தெரிவிக்கிறார் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய.
எனினும், 19ம் திருத்தத்தால் நாட்டில் குழப்பம் ஏற்பட்டதைத் தவிர வேறு எந்த நன்மையும் இல்லையென தெரிவிக்கிறார் தினேஸ் குணவர்தன.
அத்துடன் சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாக்கம், நாடாளுமன்றைக் கலைப்பதற்கான ஜனாதிபதியின் அதிகாரத்தை மட்டுப்படுத்தியது போன்ற செயல்கள் முற்று முழுதாக நாட்டைக் குழப்பியுள்ளதாக அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
No comments:
Post a Comment