19ஐ இல்லாதொழிக்க அமைச்சரவை இணக்கம்! - sonakar.com

Post Top Ad

Wednesday, 19 August 2020

19ஐ இல்லாதொழிக்க அமைச்சரவை இணக்கம்!

19ம் திருத்தச் சட்டத்தை நீக்கி 20ம் திருத்தச் சட்டத்தின் வரைபை உருவாக்க அமைச்சரவை இணக்கம் கண்டுள்ளதாக தெரிவிக்கிறார் அமைச்சரவை ஊடக பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல.


சிறுபான்மை சமூக கூட்டணி கட்சிகளின் உதவியுடன் மூன்றிலிரண்டு நாடாளுமன்ற பெரும்பான்மையைப் பெற்றுள்ள பெரமுன அரசு பல சட்டத் திருத்தங்களைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.


19ம் திருத்தச் சட்டத்துக்கு அமைவாக, ஒரே நபர் இரு தடவைக்கு மேல் ஜனாதிபதி பதவி வகிக்க முடியாது என்பதோடு இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அங்கம் வகிக்க முடியாத கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment