ஓகஸ்ட் 20ம் திகதி புதிய நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில் செப்டம்பர் நடுப்பகுதியில் 19ம் திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கான 20ம் திருத்தச் சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கிறது பெரமுன தரப்பு.
நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை கூட்டணி கட்சிகளின் உதவியுடன் பெற்றுள்ள பெரமுன நாட்டின் பல்வேறு அரசியல் சட்டங்களை மாற்றியமைக்கும் என்று வெகுவாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் முதலாவதாக 19ம் திருத்தச் சட்டத்தை நீக்கும் நடவடிக்கை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment