கொரோனா தொற்றுக்குள்ளாகி ஐ.டி.எச்சில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பியோடிய நபரை இராணுவத்தினர் மடக்கிப் பிடித்துள்ளனர்.
மீண்டும் குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை, ஏறிப் பயணித்த முச்சக்கர வண்டியின் சாரதி தனிமைப்படுத்தலுக்காக கந்தகாடு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிகாலை 2 மணியளவில் தப்பியோடிய குறித்த நபர் போதைப் பொருள் பாவனையாளர் எனவும் புறக்கோட்டை மெயின் வீதி வரை சென்றுள்ளதாகவும் தேசிய வைத்தியசாலைக்கு சென்ற நிலையிலேயே அங்கு ஊழியர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு பாதுகாப்பு தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment