தயாசிறிக்கு நல்ல பாடம் புகட்டப்படும்: பிரசன்ன சவால் - sonakar.com

Post Top Ad

Sunday 5 July 2020

தயாசிறிக்கு நல்ல பாடம் புகட்டப்படும்: பிரசன்ன சவால்

https://www.photojoiner.net/image/TBbNGbzZ

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலசுகட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கு மக்கள் நல்ல பாடம் ஒன்றை புகட்டுவார்கள் என்கிறார் பிரசன்ன ரணதுங்க.

மஹிந்த ராஜபக்சவைக் கை விட்டு மைத்ரியுடன் இணைந்து கொண்ட யாருக்கும் மக்கள் வாக்களிக்கக் கூடாது என பெரமுனவினர் தெரிவித்ததையிட்டு தயாசிறி பெரும் குழப்பமடைந்து உளறி வருவதாகவும் அவர் முடிந்தால் தன்னை விட ஒரு வாக்கேனும் அதிகமாக எடுத்துக் காட்டட்டும் எனவும் பிரசன்ன தெரிவிக்கிறார்.

இதேவேளை, பொதுத் தேர்தலுடன் தான் தலைமைப்பதவியை அடுத்த தலைமுறையில் ஒருவருக்கு விட்டுக் கொடுக்கப் போவதாக மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment