அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பகுதியில் தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணித் தலைவரும் அகில இலங்கை தமிழர் மகாசபை சார்பாக திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் களமிறங்கியுள்ள தலைமை வேட்பாளராகிய கருணா அம்மான் என அழைக்கப்படும் வினாயகமூர்த்தி முரளிதரனை வரவேற்று தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணியின் இளைஞர் அமைப்பாளர் யுவராஜ் தலைமையில் பாண்டிருப்பு பகுதியில் நடாத்தப்பட்ட பிரசார கூட்டம் புதன்கிழமை (22) இரவு இடம்பெற்றது.
இதன் போது அன்டன் பாலசிங்கம் என்பவர் உலக ராஜதந்திரி என குறிப்பிட்டு அவரை இழந்தது தான் தழிழ் இனம் தற்போது வரை மீள எழும்பாமல் இருப்பதற்கு காரணம் என கூறியதுடன் இனிவரும் காலங்களில் இவ்வாறானவர்களை நிராகரித்து வடகிழக்கில் மாற்றங்களை நாம் உருவாக்க வேண்டும் என குறிப்பிட்டார்.
அத்துடன் தன்னை 'நம்பி' வந்த கூட்டத்தைப் பார்த்து கருணா அம்மான் கண்ணீருடன் உரையாற்றியிருந்தார்.
-பாறுக் ஷிஹான்
No comments:
Post a Comment