ரவி கருணாநாயக்க உள்ளிட்டோரை கைது செய்யத் தடை - sonakar.com

Post Top Ad

Tuesday 7 July 2020

ரவி கருணாநாயக்க உள்ளிட்டோரை கைது செய்யத் தடை


பிணை முறி மோசடி விவகாரத்தின் பின்னணியில் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட ஏழுபேருக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த பிடியாணைக்குத் தடை விதித்துள்ளது மேன் முறையீட்டு நீதிமன்றம்.

பிடியாணைக்கு எதிராக ரவி தரப்பு மேற்கொண்டிருந்த மேன்முறையீட்டின் பின்னணியிலேயே இத்தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், ஆட்சேபனையைப் பதிவு செய்ய பிரதிவாதிகளுக்கு ஆறு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகள் தொடர்கின்ற அதேவேளை, அர்ஜுன் மகேந்திரன் தனது பெயரையும் மாற்றி விட்டதாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment