மஹிந்தானந்த மன்னிப்பு கேட்க வேண்டும்: நவின்! - sonakar.com

Post Top Ad

Saturday, 4 July 2020

மஹிந்தானந்த மன்னிப்பு கேட்க வேண்டும்: நவின்!

https://www.photojoiner.net/image/TGaZsuF9

இலங்கை கிரிக்கட் விளையாட்டு வீரர்களை அசௌகரியத்துக்குள்ளாக்கிய மஹிந்தானந்த அளுத்கமகே பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவிக்கிறார் முன்னாள்  அமைச்சரான நவின் திசாநாயக்க.

சாட்சியங்கள் இல்லாத குற்றச்சாட்டொன்றை வெளியிட்டு அதனூடாக கிரிக்கட் வீரர்களுக்கும் இழுக்கை ஏற்படுத்திய மஹிந்தானந்தவின் செயல் பாரதூரமானது எனவும் தற்போது விசாரணையும் கைவிடப்பட்டுள்ள நிலையில் அவர் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் நவின் தெரிவித்துள்ளார்.

சங்கக்கார, உபுல் தரங்க, அரவிந்த டி சில்வா ஆகியோர் விசாரிக்கப்பட்ட நிலையில் விசாரணை கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment