மஹிந்தவின் மேடையில் ஏறி தேரர் அட்டகாசம்! - sonakar.com

Post Top Ad

Sunday, 19 July 2020

மஹிந்தவின் மேடையில் ஏறி தேரர் அட்டகாசம்!


மஹிந்த ராஜபக்ச தலைமையில் செவனகலயில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் அத்துமீறி மேடையேறிய தேரர் ஒருவர் முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுக்கு எதிர்ப்பு வெளியிட்டு கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ரணில் - மைத்ரி கூட்டாட்சியில் பங்கேற்றவர்களுக்கு பெரமுனயில் இடமில்லையென்று கூறியே குறித்த தேரர் அத்துமீறி மேடையேறிப் பேசியிருந்தார்.

இதேவேளை, சம்பவங்கள் நடந்தேறிய பின் மஹிந்த ராஜபக்ச கூட்டத்துக்கு வந்து 'தலைமை' தாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment