பொலிசார் மீது மோதி தப்பிச் சென்ற டிப்பர் மீட்பு! - sonakar.com

Post Top Ad

Tuesday 14 July 2020

பொலிசார் மீது மோதி தப்பிச் சென்ற டிப்பர் மீட்பு!


மாத்தறை - ஹக்மன வீதியில் கொங்கல பகுதியில் பொலிஸ் சோதனைச் சாவடியில் பணியிலிருந்து மூன்று பொலிசார் மீது மோதிவிட்டு தப்பிச் சென்ற டிப்பர் வாகனம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் ஒரு பொலிஸ் அதிகாரி உயிரிழந்ததுடன் மேலும் இருவர் காயமடைந்திருந்தனர்.

இந்நிலையில், ஹங்கம - கட்டகடுவ பகுதி வீடொன்றிலிருந்து டிப்பர் மீட்கப்பட்டுள்ளதுடன் தலைமறைவாக இருந்த சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment