கந்தகாடுவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக இயங்கி வரும் விசேட சிகிச்சை நிலையத்தில் குழு மோதல் இடம்பெற்று ஐவர் காயமுற்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கந்தகாடு மற்றும் சேனபுர புனர்வாழ்வு மையங்களில் தொற்றுக்குள்ளானவர்கள் இவ்விசேட சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இரு இடங்களையும் சேர்ந்த குழுக்களாகப் பிரிந்து இவ்வாறு சண்டையிட்டுக் கொண்டுள்ளனர்.
மோதலில் இரு தரப்பிலிருந்தும் ஐவர் காயமுற்று அதற்கும் சிகிச்சை பெற்று வருவதோடு சுத்திகரிப்பு பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த பொருட்களை உபயோகித்து மோதிக்கொண்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment