விசாரிக்க வேண்டியவர்களை விசாரிக்கவில்லை: மஹிந்தானந்த - sonakar.com

Post Top Ad

Saturday 4 July 2020

விசாரிக்க வேண்டியவர்களை விசாரிக்கவில்லை: மஹிந்தானந்த


2011 கிரிக்கட் உலக கிண்ண சூதாட்டம் தொடர்பில் விசாரிக்க வேண்டியவர்கள் விசாரிக்கப்படவில்லையென தெரிவிக்கிறார் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே.

விளையாட்டு வீரர்களுக்கு குறித்த விவகாரத்தில் தொடர்பில்லையென தான் தெரிவித்திருந்த போதிலும் சங்கக்கார, மஹேலவை விசாரிக்க வேண்டிய அவசியமிருக்கவில்லையெனவும் தான் பெயர் குறிப்பிட்டு விபரங்களை முழுமையாகக் கொடுத்திருந்தும் விசாரிக்கப்பட வேண்டியவர்களை பொலிசார் விசாரிக்கவில்லையென அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.

எனினும், குறித்த ஆட்டத்தில் எவ்வித  சந்தேகமும் இல்லையென சர்வதேச கிரிக்கட் கவுன்சில் நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment