மூன்று நாட்களில் வீடு திரும்பும் ஜிந்துபிட்டி மக்கள் - sonakar.com

Post Top Ad

Monday, 6 July 2020

மூன்று நாட்களில் வீடு திரும்பும் ஜிந்துபிட்டி மக்கள்

dapvK0P

கொழும்பு 13, ஜிந்துபிட்டி பகுதியிலிருந்து தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த 154 பேரையும் வீடுகளுக்கு அனுப்பி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளானதாக அறியப்பட்ட நபருக்கு அவ்வாறு தொற்று எதுவுமில்லையென்பது நேற்றைய தினம் உறுதி செய்யப்பட்டுள்தையடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ஏலவே கொரோனா தொற்றில்லாத முஸ்லிம் பெண்ணொருவர் தவறாக அடையாளப்படுத்தப்பட்டு எரியூட்டப்பட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment