சஜித்தின் 'பெயர்' அடுத்த பட்டியலில் வரும்: அகில! - sonakar.com

Post Top Ad

Wednesday, 29 July 2020

சஜித்தின் 'பெயர்' அடுத்த பட்டியலில் வரும்: அகில!


நேற்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து 115 பேர் நீக்கப்பட்டிருக்கும் நிலையில் அதில் சஜித் பிரேமதாசவின் பெயர் உள்ளடக்கப்படவில்லையெ கேள்வியெழுந்துள்ளது.

இந்நிலையில், இதற்கு பதிலளித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம், தற்சமயம் நிறைவடைந்துள்ள ஒழுக்காற்று விசாரணைகளின் அடிப்படையில் கட்சிக்கு எதிராக செயற்பட்ட 115 பேர் முதற்கட்டமாகவே நீக்கப்பட்டிருப்பதாகவும் ஏனைய விசாரணைகள் நிறைவுற்றதும் சஜித்தின் பெயரும் வரும் எனவும் விளக்கமளித்துள்ளார்.

சமகி ஜன பலவேகய எனும் கட்சியூடாக இம்முறை தேர்தலில் போட்டியிடும் 54 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 61 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இவ்வாறு நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment