சஜித் பிரேமதாசவையும் அவரது பாரியாரையும் இழிவு படுத்துவதாக நினைத்துக் கொண்டு அனைத்து பெண்களையும் மஹிந்த ராஜபக்ச இழிவாகப் பேசிவிட்டதாக தெரிவிக்கிறது சமகி ஜன பலவேகய.
சஜித்துக்கு மகப்பேறு இல்லாததை சுட்டிக்காட்டி தேர்தல் பிரச்சாரத்தின் போது இழிவாகப் பேசியமை குழந்தைப் பாக்கியத்துக்காக காத்திருக்கும் அனைத்து தம்பதிகளையும் குறிப்பாக பெண்களையும் இழிவுபடுத்தியதற்குச் சமம் என விபரத்துள்ள ஹிருனிகா,
கர்ப்பமுற்றாலும் கூட குழந்தை இறந்து பிறக்கின்ற அல்லது கருக் கலைகின்ற பல்வேறு துன்பங்களை எதிர்நோக்கக்கூடிய சூழ்நிலைகள் பற்றி போதிய விளக்கமுள்ள ஒரு வயோதிபர் அடுத்தவரை இழிவுபடுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என ஹிருனிகா மேலும் தெரிவித்துள்ளமையும் நேற்றைய தினம் இது தொடர்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment