கொரோனா சூழ்நிலையில் உலகின் அனைத்து நாடுகளிலும் வரிக்குறைப்பு செய்து அத்தியாவசியப் பொருட்களை நியாய விலையில் மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆயினும், இலங்கையில் மாத்திரம் அது தலை கீழாக நடப்பதாக தெரிவிக்கிறார் ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க.
பருப்பு மற்றும் டின் மீனின் விலையைக் குறைப்பதாக தேசிய அளவில் விளம்பரம் மற்றும் பிரச்சாரம் செய்து ஆரம்பித்து, சத்தமே இல்லாமல் விலைகளை அதிகரித்து விட்டார்கள். ஈற்றில், கடைகளுக்குப் பொருட்கள் வாங்கச் செல்லும் மக்கள் வரிச்சுமையால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
No comments:
Post a Comment