சஜித் இன்னும் 5 வருடம் பொறுமையாக இருந்திருக்கலாம்: ருவன் - sonakar.com

Post Top Ad

Thursday 9 July 2020

சஜித் இன்னும் 5 வருடம் பொறுமையாக இருந்திருக்கலாம்: ருவன்

https://www.photojoiner.net/image/QlmhPHbY

சஜித் பிரேமதாச இன்னும் ஐந்து வருடங்கள் பொறுமையாக இருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கலாம் என தெரிவிக்கிறார் ருவன் விஜேவர்தன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பண்டாரநாயக்க குடும்பத்தினது, அது போன்று பெரமுன ராஜபக்ச குடும்பத்தினது. அவ்வாறின்றி ஐக்கிய தேசியக் கட்சி மக்களுடையது. அவ்வாறான ஒரு கட்சியை வழி நடாத்த சஜித் இன்னும்  ஐந்து வருடங்கள் பொறுமையாக இருந்திருக்கலாம் என்கிறார் ருவன்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி தலைமைத்துவத்தில் மாற்றம் வர வேண்டும் என கடந்த பத்து வருடங்களாக அவ்வப்போது கட்சிக்குள் முரண்பாடுகள் தோன்றி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment