கொரோனா சூழ்நிலையில் தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முழுமையாகக் கொண்டு செல்ல முடியாமல் போயுள்ளதாகவும் ஓகஸ்ட் 3ம் திகதியும் பிரச்சாரம் செய்ய அனுமதி தர வேண்டும் எனவும் சில அரசியல் கட்சிகள் முன் வைத்த கோரிக்கையை நிராகரித்துள்ளார் தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய.
ஓகஸ்ட் 2ம் திகதி நள்ளிரவுடன் பிரச்சார நடவடிக்கைகள் நிறைவு பெற வேண்டும் என திட்டவட்டமாக அவர் பதிலளித்துள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஓகஸ்ட் 3ம் திகதி போயா தினம் என்பதால் அரசியல் கட்சிகள் அதனை சாதகமாக்கிக் கொள்ள முனைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment