சுகாதார கட்டுப்பாடுகளுடன் 2020 ஹஜ் ஆரம்பம்! - sonakar.com

Post Top Ad

Wednesday, 29 July 2020

சுகாதார கட்டுப்பாடுகளுடன் 2020 ஹஜ் ஆரம்பம்!

https://www.photojoiner.net/image/I9IFmdxd

சுமார் 2 மில்லியன் முஸ்லிம்கள் வருடாந்தம் ஹஜ் கடமையை நிறைவேற்ற கூடும் காலமாக இருந்தும் இம்முறை கொரோனா தொற்றின் பின்னணியில் உள்நாட்டில் வாழும் 10,000 பேருக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் ஹஜ் கடமைகள் சவுதியில் ஆரம்பமாகியுள்ளன. போக்குவரத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள பேருந்துகளில் குறித்த நபர் தொடர்ச்சியாக ஒரே ஆசனத்திலேயே அமர்வதோடு ஒவ்வொரு 50 பேர் கொண்ட குழுவுக்கும் சுகாதாரப் பொறுப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, சிறு குழுக்களாகவே தவாப் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு சவுதியில் வதியும் வெளிநாட்டவர்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில், நாளை அரபாவுடைய தினமாகவும் நாளை மறுதினம் 31ம் திகதி பெருநாள் கொண்டாடப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment