ஈஸ்டர்: தெரிந்திருந்தால் அனுமதித்திருப்பேனா? மைத்ரி கேள்வி! - sonakar.com

Post Top Ad

Wednesday, 17 June 2020

ஈஸ்டர்: தெரிந்திருந்தால் அனுமதித்திருப்பேனா? மைத்ரி கேள்வி!


ஈஸ்டர் தாக்குதல் பற்றி தனக்கு முன் கூட்டியே தெரிந்திருந்தால் அதனை அனுமதித்திருக்கப் போவதில்லையென தெரிவிக்கிறார் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.

குறித்த தாக்குதல் திட்டத்தை அறிந்தும் செயற்படாதவர்கள் யார் என்ற விபரம் விசாரணையூடாக வெளியாகியுள்ளதாகவும், அவர்கள் அதற்கான தண்டனையை அனுபவித்துக் கொண்டிருப்பதாகவும் மைத்ரி மேலும் தெரிவிக்கிறார்.

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் பொலிஸ் மா அதிபர் பூஜித மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோ ஆகியோர் சிறைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment