கொரோனா எண்ணிக்கை 'எதிர்பார்க்காதது': அனில் - sonakar.com

Post Top Ad

Tuesday 2 June 2020

கொரோனா எண்ணிக்கை 'எதிர்பார்க்காதது': அனில்

ptvwZVP

வெளிநாட்டிலிருந்து இவ்வாறு பெருந்தொகையினர் கொரோனா தொற்றோடு நாடு திரும்பியிருப்பார்கள் என எதிர்பார்த்திருக்கவில்லையனெ தெரிவிக்கிறார் சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க.

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய 520க்கும் மேற்பட்டோர் தொற்றுககுள்ளாகியுள்ளதோடு இதுவரை இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இது எதிர்பார்க்கப்படாததொன்று என அனில் விளக்கமளித்துள்ள அதேவேளை சமூக மட்டத்தில் பரிசோதனைகளை நடாத்தாதிருப்பதன் ஊடாக அரசு கொரோனா தொற்றின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டுவதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தற்சமயம் தொடர்ந்தும் 824 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments:

Post a Comment