சஜித் அணியின் தடைக்கு இடைக்காலத் 'தடை' விதிக்க மறுப்பு - sonakar.com

Post Top Ad

Monday, 22 June 2020

சஜித் அணியின் தடைக்கு இடைக்காலத் 'தடை' விதிக்க மறுப்பு


ஐக்கிய தேசியக் கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டுள்ள சஜித் அணியினர், தமது தடைக்கு எதிராக இடைக்காலத் தடை கோரி தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த கொழும்பு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்க மறுத்துள்ளது.

மனுதாரர்கள் முழு உண்மைகளையும் உள்ளடக்கவில்லையென சுட்டிக்காட்டியுள்ள நீதிமன்றம் ஜுலை 27ம் திகதி வழக்கு விசாரணைக்கு தேதி குறித்துள்ளதுடன் ஐக்கிய தேசியக் கட்சியினர் குறித்த மனு மீதான ஆட்சேபனையிருந்தால் இரு வாரங்களுக்குள் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஐ.தே.க தலைவர் ரணில் மற்றும் பிரதித் தலைவர் ரவி கருணாநாயக்க ஆகியோர் வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருப்பதால் அவர்களுக்கும் அறிவித்தலை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment