இலங்கையில் கொரோனா தொற்று சமூக மட்டத்தில் இல்லையென தெரிவிக்கப்பட்டு வரும் அதேவேளை இரவு வேளைகளில் அமுலில் உள்ள ஊரடங்கு தொடரும் என தெரிவிக்கப்படுகிறது.
பொது மக்கள் ஒன்று கூடல்களைத் தவிர்க்கவே இவ்வாறு இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமுலில் இருப்பதாக அரச தரப்பு விளக்கமளித்துள்ளது.
அண்மைய நாட்களில் பெரும்பாலும் வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்களே கொரோனா தொற்றுக்குள்ளாகி வருகின்ற அதேவேளை தற்சமயம் தொடர்ந்தும் 856 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு 990 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment